FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வைகுந்த ஏகாதசி விழா: பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு

வைகுந்த ஏகாதசி விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்களில்

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

வைகுந்த ஏகாதசி விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பள்ளி கொண்ட பரந்தாமனுக்கு பிடித்த மாதமாக கருதப்படுவது மார்கழி. மற்ற மாதங்களில் வரும் ஏகாதசி விழாவை காட்டிலும், மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி விழா சிறப்பானது. வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு, அரியலூர் கோதண்ட ராமசாமி திருக்கோயிலில்
செவ்வாய்க்கிழமை அதிகாலை காலை, உற்ஸவ மூர்த்தி, பரமபத வாசல் வழியாக வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.  அப்போது கோயில் வெளிப்பிரகாரத்தில் நம்மாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அங்கு பிரத்யேகமாக வைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய கண்ணாடிப் பெட்டகத்தில் கோதண்ட ராமசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதைத்தொடர்ந்து மோட்ச சேவை மற்றும் திருவீதி உலா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், காலையில் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.
இதேபோல் செந்துறை, திருமானூர், ஜயங்கொண்டம், உடையார்பாளையம், பொன்பரப்பி, ஆண்டிமடம், தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் 
பரமபத வாசல் திறக்கப்பட்டதும் பக்தர்களின் "கோவிந்தா, கோவிந்தா' கோஷம் விண்ணைப் பிளந்தது.
படவிளக்கம்- பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்ற சொர்க்கவாசல் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு காட்சி அளித்த பெருமாள்.   
பெரம்பலூர்: பெரம்பலூர் மரகதவள்ளி தாயார் சமேத மதனகோபால சுவாமி திருக்கோயிலில், வைகுந்த ஏகாதசி பெரு விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பரமபத வாசல் திறக்கப்பட்டது.  
பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை காலை 10 மணியளவில் மூலவர் மற்றும் உற்ஸவ மூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும், இரவு 7 மணியளவில் நாச்சியார் திருக்கோலம் மோகினி அலங்காரத்தில் சுவாமி எழுத்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.  தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி, பரமபத வாசல் வழியாக பக்கர்களுக்கு காட்சி தந்தார். பின்னர், கோயில் எதிரேயுள்ள ஆஞ்நேயரை 3 முறை வலம் வந்து, மீண்டும் பரமபத வாசல் வழியாக ஆண்டாள் மண்டத்தில் அமைக்கப்பட்டிருந்த பழத்தோட்டத்தில் பக்த்தர்களுக்கு காட்சி அளித்தார். அங்கு, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாரதனையும் நடத்தப்பட்டது. விழாவில், கோயில் நிர்வாக அலுவலர் வை.  மணி, முன்னாள் அறங்காவலர் பெ. வைத்தில்வரன், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். சிவசுப்ரமணியம், செயலர் எம்.எஸ். விவேகானந்தன் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 
இதேபோல, பாடாலூர், குன்னம், வேப்பூர், வாலிகண்டபுரம் உள்பட மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சிகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதில், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments