FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

ஜயங்கொண்டத்தில் தலைமையாசிரியர்களுக்குதிறன் வளர்ப்புப் பயிற்சி

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர்களுக்கான குழந்தைகள்

Updated On : 31 டிசம்பர் 2018, 10:10 am IST
பகிர்:

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டக் கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமை வகித்து பயிற்சியைத் தொடக்கி வைத்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முகமதுயூனுஸ்கான்,தலைமை ஆசிரியர் அண்ணாதுரை,குழந்தைகள் நலக் குழுத் தலைவர் துரைராஜன்,மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் முத்துரங்கன் ஆகியோர் குழந்தைகளின் உளவியல் குறித்து விளக்கமளித்தனர். 
மருத்துவர் மீனா வளர் இளம்பருவத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் சுகாதார பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் குறித்து விளக்கினார். தா. பழூர் காவல் நிலைய ஆய்வாளர் செல்வக்குமாரி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான குழந்தைகளை பள்ளியில் சேர்த்து கொள்ள மறுக்கக் கூடாது, பள்ளிக் குழந்தைகளுக்கு நல்ல  தொடுதல் எது,கெட்ட தொடுதல்  குறித்து பெற்றோர் சொல்லிக் கொடுக்க வேண்டும்.  குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம்,பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிவாரண உதவிகள் குறித்தும் பேசினார். 
இதில் பாதுகாப்பு அலுவலர் செல்வராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு அலுவலர்  இருதயராஜ் வரவேற்றார். பணியாளர் முத்தமிழ்ச்செல்வன் நன்றி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments