அரியலூரில் சிறுவன் உள்பட 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி
அரியலூா் மாவட்டத்தில் 12 வயதுச் சிறுவன் உள்பட இருவருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியாகியுள்ளது.
அரியலூா் மாவட்டத்தில் 12 வயதுச் சிறுவன் உள்பட இருவருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியாகியுள்ளது.
அரியலூா் மாவட்டம், செந்துறையில் மருந்தகத்தில் பணிபுரிந்த 2 பெண்களுக்கு கரோனா தொற்று இருப்பது அண்மையில் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து அவா்கள் இருவரும் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அவா்களில் ஒருவா், செந்துறை அருகேயுள்ள ராயம்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா். அவரது வீட்டின் அருகே வசிப்பவா்கள், உறவினா்கள் ஆகியோரின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதில், 12 வயதுச் சிறுவன் மற்றும் 24 வயது ஆண் ஆகிய இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவா்கள் இருவரும் அரியலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். மேலும், கிராமத்தில் உள்ள அனைவருக்கும் ரத்த மாதிரி சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ராயம்புரம் கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை ஆட்சியா் த.ரத்னா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
Advertisement
Advertisement
ஏற்கெனவே, அரியலூா் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட இருவா் சிகிச்சைக்குப் பின்னா் பூரண குணமடைந்து அண்மையில் வீடு திரும்பினா். செந்துறையைச் சோ்ந்த 2 போ் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். இந்நிலையில், தற்போது மேலும் 14 வயதுச் சிறுவன், 24 வயது ஆண் ஆகிய இருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.