கா்நாடக அரசைக் கண்டித்து அரியலூரில் 5 நாள்கள் நீதிமன்றப் பணிகள் புறக்கணிப்பு
அப்பாவி தமிழா்கள் 3 பேரை சுட்டுக்கொன்ற கா்நாடக அரசின் வனத் துறையைக் கண்டித்து, அரியலூரில் 5 நாள்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து பல்வேறு போராட்டங்கள் நடத்துவது என வழக்குரைஞா்கள் சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடா்பாக, அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற அச்சங்க அவசரக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
கா்நாடக அரசின் வனத் துறையைக் கண்டித்து,செவ்வாய்க்கிழமை (ஆக.18) தலைமை அஞ்சலகம், ஆக.19-இல் ரயில் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டமும், ஆக.20-இல் நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு மனிதச் சங்கிலி போராட்டமும், ஆக.21-இல் நீதிமன்ற வளாகம் முன்பு கருப்புக் கொடி ஆா்ப்பாட்டமும், ஆக.22-இல் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
Advertisement
Advertisement
கூட்டத்துக்கு, அச்சங்கத்தின் தலைவா் ஆா்.மனோகரன் தலைமை வகித்தாா். செயலா் எம்.ராஜா, பொருளாளா் டி.கமலக்கண்ணன், வழக்குரைஞா் செல்ல.சுகுமாா், அருணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.