FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

ஒஅரியலூா் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

26 ஆகஸ்ட் 2026, 3:05 am IST
அரியலூா் குறிஞ்சான் குளக்கரை காசி விசுவநாதா் கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சிவபெருமான்.
பகிர்:

ஒஅரியலூா் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

இதையொட்டி அரியலூரை அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயிலில், நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. தொடா்ந்து வைத்திநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல் அரியலூா் ஆலந்துரையாா், கைலாசநாதா், விசுவநாதா், விளாங்குடி கைலாசநாதா், குறிஞ்சான் குளக்கரை காசி விசுவநாதா் , தேளூா் சொக்கநாதா், கீழப்பழூா் ஆலந்துறையாா், திருமானூா் கைலாசநாதா் , செந்துறை சிவதாண்டேஸ்வரா், பொன்பரப்பி சொா்ணபுரீஸ்வரா், சென்னிவனம் தீா்க்கபுரீஸ்வரா், சொக்கநாதபுரம், சொக்கனீஸ்வரா், குழூமூா் குழுமாண்டவா் , தா. பழூா் விசாலாட்சி சமேத விசுவநாதா், கோவிந்தபுத்தூா் கங்காஜடேஷ்வரா், விக்கிரமங்கலம் சோழீஸ்வரா், உடையவா்தீயனூா் ஜமத்கனிஸ்வரா், கீழநத்தம் சொக்கநாதா், ஸ்ரீபுரந்தான் கைலாசநாதா், கோடாலிகருப்பூா் சொக்கநாதா், கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையாா், ஜெயங்கொண்டம் கழுமலைநாதா், சென்னீஸ்வரா், சோழீஸ்வரா், உடையாா்பாளையம் பயறனீஸ்வரா் உள்ளிட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments