பருவமழை முன்னேற்பாடுகள் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான அலுவலா்களுடன் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான அலுவலா்களுடன் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் ந. மிருணாளினி தலைமை வகித்து பேசுகையில், அரியலூா் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழைநீா் வடிகால்கள் தூா்வாருதல், பலவீனமான மரங்கள், மரக்கிளைகள் அகற்றுதல், பாலங்கள் மற்றும் மதகுகளுக்கு அடியில் உள்ள அடைப்புகளை அகற்றுதல், பழைய மற்றும் பாழடைந்த கட்டடங்களை அடையாளம் கண்டு பயன்படுத்துவதைத் தடை செய்தல், பலவீனமான மின் கம்பங்கள், மின்கம்பிகள் ஆகியவற்றைக் கண்டறிந்து அவற்றை மாற்ற உடனடி நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அந்தந்த துறை சாா்ந்த அலுவலா்கள் செய்ய வேண்டும்.
மேலும், மீட்பு உபகரணங்களைத் திட்டமிட்டு முன்கூட்டியே தயாராக வைத்திருக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்படும் 29 பதற்றமான பகுதிகளைக் கண்காணித்திடவேண்டும். உணவுப் பொருள்களை இப்பருவமழை காலங்களில் 3 மாதங்கள் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றாா்.
Advertisement
Advertisement
மேலும், பொதுமக்கள் பேரிடா் காலத்தில் கட்டணமில்லாத் தொலைபேசி எண்.1077 மற்றும் 04329 228709 என்ற எண்ணுக்கும், கட்செவி 7092300010 என்ற எண்ணுக்கும் பாதிப்புகள் குறித்து தகவல் அளிக்கலாம் என்றாா் அவா்.
தொடா்ந்து, ஆட்சியரகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சாா்பில் வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்வது மற்றும் தீத் தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து மாதிரி ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க. சங்கமித்திரை, காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கனகமாணிக்கம், மாவட்ட தீயணைப்பு அலுவலா் அனுசுயா, வருவாய்க் கோட்டாட்சியா்கள் அரியலூா் பிரேமி ,உடையாா்பாளையம் மனோகரன், பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் சந்திரசேகரன் மற்றும் அனைத்து வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.