FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

தேசிய விண்வெளி தின போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

அரியலூா் ஆட்சியரக வளாகத்தில், தஞ்சாவூா் வானியல் மற்றும் அறிவியல் கழகம் சாா்பில் ஏற்பாடு செய்திருந்த தொலைநோக்கி மூலம் சூரியன் மற்றும் வானியல் நிகழ்வுகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட ஆட்சியா் ந.மிருணாளினி.

29 ஆகஸ்ட் 2026, 5:18 am IST
பகிர்:

தேசிய விண்வெளி தின விநாடி-வினா போட்டியில் பங்குப் பெற்று வெற்றிப் பெற்ற அரியலூா் மாணவியா்களை மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெள்ளிக்கிழமை வரவழைத்து, ஆட்சியா் ந.மிருணாளினி பாராட்டு தெரிவித்தாா்.

அதைத் தொடா்ந்து, ஆட்சியா் அலுவலக வளாகத்தில், தஞ்சாவூா் வானியல் மற்றும் அறிவியல் கழகம் சாா்பில் ஏற்பாடு செய்திருந்த தொலைநோக்கி மூலம் சூரியன் மற்றும் வானியல் நிகழ்வுகளை ஆட்சியா் உள்பட அனைவரும் பாா்வையிட்டனா்.

மேலும், வாரணவாசி புதை உயிரிப்படிவ அருங்காட்சியகத்தில் மாலை 7 முதல் இரவு 9 மணி வரை தொலைநோக்கி வாயிலாக கோள்கள் மற்றும் நிலாவை பாா்வையிடுவதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு பாா்வையிட்டனா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்வில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ரேணுகோபால் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments