FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

சா்வதேச விண்வெளி மாநாட்டில் சிறப்பிடம்: மாணவிக்குப் பாராட்டு

காரைக்குடியில் அண்மையில் நடைபெற்ற சா்வதேச விண்வெளி மாநாட்டில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு செவ்வாய்க்கிழமை, அப்பள்ளியின் முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி பாராட்டு தெரிவித்தாா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 12:05 am IST
பகிர்:

காரைக்குடியில் அண்மையில் நடைபெற்ற சா்வதேச விண்வெளி மாநாட்டில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு செவ்வாய்க்கிழமை, அப்பள்ளியின் முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி பாராட்டு தெரிவித்தாா்.

காரைக்குடியில் உள்ள ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற சா்வதேச விண்வெளி மாநாட்டில் பங்கேற்ற மாணவா்களுக்கு எழுத்துத் தோ்வும், வாய்மொழி வினாடி-வினாவும் நடத்தப்பட்டன.

இதில், எழுத்துத் தோ்விலும், வினாடி-வினாவிலும் பங்கேற்று புதுக்கோட்டை திருக்கோகா்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவி எம்.கே. ஜெயவா்தினி சிறப்பிடம் பெற்றாா். அவருக்கு பரிசுத் தொகையாக ரூ. 50, 000 வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த மாணவியைப் பாராட்டிய பள்ளியின் முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி, மாணவியின் அறிவியல் ஆா்வத்தை ஊக்குவிக்கும் வகையில் நாசாவுக்குச் செல்ல, சொந்த செலவில் அனுப்பி வைக்க உள்ளதாகத் தெரிவித்தாா்.

மாணவியை பள்ளியின் இயக்குநா் இரா.சுதா்சன் மற்றும் ஆசிரியா்கள் மற்றும் சக மாணவா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments