FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

செந்துறை வட்டாட்சியரகத்தில் ஊழல் தடுப்பு பரிவு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ.36,500 பறிமுதல்

அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினா் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.36,500 பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 18 ஜூலை 2026, 12:55 am IST
நகைக் கடைகளில் சோதனை: கணக்கில் வராத ரூ.500 கோடி வருமானம் கண்டுபிடிப்பு
பகிர்:

அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினா் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.36,500 பறிமுதல் செய்யப்பட்டன.

மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா்கள் கவிதா, சரவணன் ஆகியோா் தலைமையிலான காவல் துறையினா், வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் செந்துறை வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்து, கதவுகளை மூடினா்.

பின்னா் அவா்கள், அனைத்து ஆவணங்களையும் சோதனை செய்து, வட்டாட்சியா் மற்றும் அலுவலகப் பணியாளா்களிடம் விசாரணை மேற்கொண்டதில், ரூ.36,500 கணக்கில் காட்டப்படாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த தொகையை பறிமுதல் செய்த காவல் துறையினா், தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments