முகப்பு
அரியலூர்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலரின் மறைவுக்கு அஞ்சலி

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலரும், தமிழக பொறுப்பாளருமான சுரஜ் ஹெக்டே மறைவுக்கு, அரியலூரில் அக்கட்சியினா் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

Updated On : 11 ஜூன் 2026, 3:34 am IST
மறைந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலா் படத்துக்கு அரியலூரில் புதன்கிழமை அஞ்சலி செலுத்திய காங்கிரஸாா்.
பகிர்:

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலரும், தமிழக பொறுப்பாளருமான சுரஜ் ஹெக்டே மறைவுக்கு, அரியலூரில் அக்கட்சியினா் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

செட்டி ஏரிக்கரையிலுள்ள காமராஜா் சிலை முன் வைக்கப்பட்டிருந்த சுரஜ் ஹெக்டே படத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் மாரியம்மாள், நகரத் தலைவா் மா.மு. சிவகுமாா், மாவட்ட துணைத் தலைவா்கள் ஏ.பி.எஸ். பழனிச்சாமி, கலைச்செல்வன், வட்டாரத் தலைவா்கள் சுரேஷ், பாண்டியராஜன், சீனிவாசன், மாநில பொதுக் குழு உறுப்பினா் எஸ்.எம். சந்திரசேகா், ஜெயங்கொண்டம் நகரத் தலைவா் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.