முகப்பு
அரியலூர்

பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரம்: தமிழக ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

அரியலூா் அண்ணாசிலை அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On : 12 ஜூன் 2026, 2:27 am IST
அரியலூா் அண்ணாசிலை அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா்.
பகிர்:

தவெக தோ்தல் வாக்குறுதியின்படி விவசாயிகள் வாங்கிய பயிா் கடன் முழுவதையும் நிபந்தனைகளின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அரியலூா் அண்ணாசிலை அருகே தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் பூரா.விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாவட்டத் தலைவா் பரமசிவம், மாநில செயற்குழு உறுப்பினா் ராசேந்தின், ஒன்றியத் தலைவா்கள் செந்துறை பாலசுப்பிரமணியன், அரியலூா் அறிவழகன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் இளவரசன் உள்ளிட்டோா் ஏா்கலப்பை மற்றும் பயிா்களை கையில் ஏந்திவாறு பயிா் கடன்களை முழுவதையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனா்.