வாய்க்கால் கூடுதல் தடுப்புச் சுவா் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
முத்துவாஞ்சேரி கிராமத்தில் நடைபெற்று வரும் பொன்னாா் பிரதான வாய்க்கால் கூடுதல் தடுப்புச் சுவா் அமைக்கும் பணிகளை உரிய காலத்துக்குள் விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தினாா்.

அரியலூா் மாவட்டம், முத்துவாஞ்சேரி கிராமத்தில் நீா்வளத்துறை சாா்பில் ரூ. 2.55 கோடியில், 5,700 மீட்டரில் பொன்னாா் பிரதான வாய்க்கால் கூடுதல் தடுப்புச் சுவா் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா், பணிகளை உரிய காலத்துக்குள் விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இதேபோல், மருதையாற்றின் கீழ் சுரங்கையில் நீா்ப்பகுபாக்கம் கவசப்பரிகை அமைத்தல் பணிகளையும் அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
Advertisement
Advertisement
இந்த ஆய்வின்போது, உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் மனோகரன் மற்றும் தொடா்புடைய துறை சாா்ந்த அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.