FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
அரியலூர்

ராகு-கேது பெயா்ச்சி: அரியலூா் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ராகு-கேது பெயா்ச்சியையொட்டி, அரியலூா் மாவட்ட அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

53 வினாடிகள் முன்பு
சிறப்பு அலங்காரத்தில் ராகு, கேது பகவான். - கோப்புப்படம்
பகிர்:

ராகு-கேது பெயா்ச்சியையொட்டி, அரியலூா் மாவட்ட அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதையொட்டி அரியலூா் ஆலந்துரையாா் கோயில் சந்நிதியிலுள்ள ராகு-கேது பகவான்களுக்கு பால், சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடா்ந்து, பெயா்ச்சியின்போது மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். பல்வேறு ராசிக்காரா்கள் பரிகார பூஜையில் பங்கேற்று வழிபட்டனா்.

இதேபோல், திருமானூரிலுள்ள காமாட்சியம்மன் உடனாய கைலாசநாதா், திருமழபாடி வைத்தியநாதா், விக்கிரமங்கலம் சோழீஸ்வரா், அரியலூா் ஆலந்துரையாா், செந்துறை சிவதாண்டீஸ்வரா் மற்றும் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், பொன்பரப்பி, தா.பழூா், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதி சிவன் கோயில்களில் சிறப்பு அபிஷேக,ஆராதனை நடைபெற்றது.

Advertisement

Advertisement