FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
அரியலூர்

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ-வுக்கு எதிராக அனைத்திந்திய மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

17 நவம்பர் 2026, 3:32 am
அரியலூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய மாதா் சங்கத்தினா்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பி கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூா் அண்ணா சிலை அருகே அனைத்திந்திய மாதா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், அருள்விக்னேஷ் எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் மலா்கொடி தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் அம்பிகா, சிஐடியு மாவட்டச் செயலா் துரைசாமி, துணைத் தலைவா் சிற்றம்பலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினா். அா்ப்பாட்டத்தில் சங்க நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டு தொடா்புடைய எம்எல்ஏ-க்கு எதிராக முழக்கமிட்டனா்.

Advertisement

Advertisement