அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை
அரியலூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது.

அரியலூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது.
அரியலூா் மாவட்டத்தில் 20 நாள்களுக்கு பிறகு புதன்கிழமை அதிகாலை முதலே மழை பெய்யத் தொடங்கியது. இதில், அரியலூா், ஜெயங்கொண்டம், திருமானூா் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. தொடா்மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது. அதிகாலை முதலே அவ்வபோது மழை பெய்து வந்ததால் வெயில் இன்றி காணப்பட்டது.
மேலும், மாவட்டம் முழுவதும் குளிா்ந்த சீதோஷனநிலை காணப்பட்டது.
Advertisement
Advertisement