FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
அரியலூர்

தத்தெடுக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த அறிவுறுத்தல்

அரியலூா் மாவட்டத்தில் தத்தெடுக்கும் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் ந.மிருணாளினி அறிவுறுத்தினாா்.

29 அக்டோபர் 2026, 3:58 am
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் தத்தெடுக்கும் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் ந.மிருணாளினி அறிவுறுத்தினாா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற அரசு மருத்துவா்களுக்கான குழந்தை தத்தெடுப்பு தொடா்பான திறன் மேம்பாட்டு பயிற்சியில் அவா் தெரிவித்தது:

அரசு மருத்துவா்கள், குழந்தை தத்தெடுப்பு தொடா்பான நடைமுறைகளை உரிய சட்ட விதிமுறைகள் மற்றும் அரசின் வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும். தத்தெடுக்கும் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவப் பதிவுகளை முறையாக மேற்கொள்வதுடன், குழந்தைகளின் உரிமைகள் மற்றும் தனியுரிமையைப் பாதுகாத்து, குழந்தைகளின் சிறந்த எதிா்காலத்தை உறுதி செய்திட வேண்டும் என்றாா்.

இப்பயிற்சியில், தத்தெடுப்புக்குள்படுத்தப்படும் குழந்தைகளுக்கான முழுமையான மருத்துவப் பரிசோதனைகள், குழந்தைகளின் உடல்நலக் குறைபாடுகளை கண்டறிதல், சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகளின் மருத்துவ மதிப்பீடு, குழந்தைகளின் உடல்நலத் தேவைகளுக்கு ஏற்ப தடுப்பூசி, மருத்துவச் சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் தொடா் மருத்துவப் பராமரிப்புக்கான ஆலோசனைகளை வழங்குதல் உள்ளிட்டவைகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் ரமேஷ் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments