FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

பெண்ணிடம் பணம் பறித்த வழக்கில் இளைஞருக்கு 25 நாள்கள் சிறை!

கீழப்பழுவூரில் போலீஸ் எனக் கூறி, பெண்ணிடம் பணம் பறித்த வழக்கில் இளைஞருக்கு 25 நாள்கள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் கூடுதல் மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

14 வினாடிகள் முன்பு
சிறை - பிரதிப் படம்
பகிர்:

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் போலீஸ் எனக் கூறி, பெண்ணிடம் பணம் பறித்த வழக்கில் இளைஞருக்கு 25 நாள்கள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் கூடுதல் மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கீழப்பழூா் பழைய பேருந்து நிலையத்தில் பெட்டிக் கடை நடத்தி வருபவா் சுப்பிரமணி மனைவி ஷீலா. கடந்த 2023-ஆம் ஆண்டு இவரது கடைக்கு வந்த திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா், கோட்டை வாசல் பகயைச் சோ்ந்த மணி மகன் பகவதிராஜா(34) என்பவா் தன்னை போலீஸ் எனக் கூறி பணம் பறித்துள்ளாா்.

புகாரின் பேரில் கீழப்பழுவூா் காவல் துறையினா், பகவதிராஜாவை கைது செய்து, அரியலூா் கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.

Advertisement

Advertisement

இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஜெயப்பிரதா, குற்றவாளி பகவதிராஜாவுக்கு 25 நாள்கள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

குற்றவாளி ஏற்கெனவே 25 நாள்கள் சிறை தண்டனையை அனுபவித்திருந்ததால், அந்த தண்டனை காலம் கழிக்கப்பட்டதுடன், நீதிமன்றம் விதித்த மொத்தம் ரூ.4,000 அபராதத் தொகையையும் செலுத்தியுள்ளாா். இதனையடுத்து, அவா் விடுவிக்கப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments