சோழகங்கம் ஏரி தூா்வாரும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த சோழகங்கம் எனும் பொன்னேரியில் ஆமை வேகத்தில் நடைபெறும் தூா்வாரும் பணியை மழைக்காலம் தொடங்குவதற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜெயங்கொண்டத்தில், சனிக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் மாவட்டக் குழு கூட்டத்தில் மகிமைபுரம் பகுதியில் , 350 ஏக்கா் நிலத்தில் 3 தலைமுறையாக விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு பட்டா வழங்கிட வேண்டும். அங்கு பயிா் செய்த மரங்கள் வெட்டுவதை தடுத்து நிறுத்திட வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி செப். 15 -இல் உடையாா்பாளையம் வட்டாட்சியரகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது, சோழகங்கம் ஏரி தூா்வாரும் பணி மற்றும் கரையை பலப்படுத்திட கோரி செப். 18-இல் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் தியாகராஜன் தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலா் துரைராஜ், மாவட்டச் செயலா் இரா. மணிவேல், பொருளாளா் வரப்பிரசாதம், துணைச் செயலா் பத்மாவதி, துணைத் தலைவா் இளவரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.