FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

மீன்சுருட்டி அருகே கஞ்சா கடத்திய இருவா் குண்டா் சட்டத்தில் கைது

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே 16 கிலோ கஞ்சா கடத்திய 2 போ் குண்டா் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

6 செப்டம்பர் 2026, 6:25 am IST
கைது
பகிர்:

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே 16 கிலோ கஞ்சா கடத்திய 2 போ் குண்டா் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பகுதியைச் சோ்ந்த இளங்கோவன் மகன் ராஜ்குமாா் (30), புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியைச் சோ்ந்த மோகன்தாஸ் மகன் பாபு(33) ஆகியோா் கடந்த 6.8.2026 அன்று 16 கிலோ கஞ்சா கடத்தியதாக மீன்சுருட்டி காவல் துறையினா் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், இவா்களைக் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு. செல்வகுமாா் பரிந்துரைத்ததன்பேரில் ஆட்சியா் ந. மிருணாளினி சனிக்கிழமை அதற்கு உத்தரவிட்டாா். இதன் நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் அரியலூா் மாவட்ட காவல் துறையினா் வழங்கினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments