வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி
குளித்தலையில் வருவாய்த் துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
குளித்தலையில் வருவாய்த் துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து புறப்பட்ட பேரணியை கோட்டாட்சியர் சக்திவேல் தொடங்கி வைத்தார். வட்டாட்சியர் ரஞ்சீத், அரசு ஆண்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணி குளித்தலை நகரின் முக்கிய வீதிகளான மாரியம்மன்கோவில், கடைவீதி, பஜனைமடம், போராளகுந்தாளம்மன் கோவில்தெரு, பேருந்து நிலையம், கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்று சுங்ககேட்டில் முடிந்தது.
குளித்தலை தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் மகாமுனி, வருவாய் ஆய்வாளர் வைரப்பெருமாள் , குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.