அதிவேகமாக இயக்கப்பட்ட மணல் லாரி சிறைபிடிப்பு
நெரூர் அருகே அதிவேகமாக இயக்கப்பட்ட மணல் லாரியை வெள்ளிக்கிழமை கிராம மக்கள் சிறைப்பிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெரூர் அருகே அதிவேகமாக இயக்கப்பட்ட மணல் லாரியை வெள்ளிக்கிழமை கிராம மக்கள் சிறைப்பிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம் நெரூர் அருகே உள்ளது செவ்வந்திபாளையம் கிராமம். இந்த பகுதி வழியாக நெரூர் அரசு மணல் குவாரியில் இருந்து மணல் ஏற்றிச்செல்லும் லாரிகள் அதிவேகமாகச் செல்வதாகவும், லாரிகள் அடிக்கடி செல்வதால் சாலை சேதமடைந்து விட்டதாகவும் அப்பகுதியினர் புகார் தெரிவித்திருந்தனர்.
மேலும் லாரிகள் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் செல்வதால் மாணவ, மாணவிகள் அவதியுற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை லாரிகள் அதிவேகமாகச் சென்றதால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் லாரிகளை சிறைபிடித்தனர்.
Advertisement
Advertisement
தகவலறிந்து வந்த வாங்கல் போலீஸார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இனி லாரியின் வேகம் கட்டுப்படுத்தப்படும்.
பள்ளிகள் நேரங்களில் லாரிகள் இயக்கப்படாது என உறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தினால் நெரூர்-மண்மங்கலம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.