பேருந்து பயணியிடம் பணம் திருடிய 2 இளைஞர்கள் போலீஸில் ஒப்படைப்பு
கரூர் வடக்கு காந்திகிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா மகன் சசிக்குமார் (26). இவர் வியாழக்கிழமை கரூர் பேருந்துநிலையத்தில் இருந்து காந்திகிராமத்திற்கு அரசு பேருந்தில் சென்றுகொண்டிருந்தார்.
கரூர் வடக்கு காந்திகிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா மகன் சசிக்குமார் (26). இவர் வியாழக்கிழமை கரூர் பேருந்துநிலையத்தில் இருந்து காந்திகிராமத்திற்கு அரசு பேருந்தில் சென்றுகொண்டிருந்தார். பேருந்து காந்திகிராமம் அருகே சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த இளைஞர்கள் இருவர் அவரது சட்டைப்பையில் இருந்த ரூ.200-யை திருடினர். இதனைக்கண்ட சசிகுமார் இருவரையும் பொதுமக்களின் உதவியுடன் பிடித்து கரூர் பசுபதிபாளையம் போலீஸில் ஒப்படைத்தார்.
போலீஸார் இரு இளைஞர்களையும் கைது செய்து விசாரித்ததில் அவர்கள் பிள்ளாபாளையத்தைச் சேர்ந்த அருணாசலம் மகன் சரவணன் (29), அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜா (27) என்பது தெரிய வந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.