ஜூனியர் அத்லெடிக் சாம்பியன் போட்டி
கரூர் மாவட்ட ஜூனியர் அத்லடிக் சாம்பியன்ஷிப் போட்டிகள் புலியூர் மைதானத்தில் அண்மையில் நடைபெற்றன.
கரூர் மாவட்ட ஜூனியர் அத்லடிக் சாம்பியன்ஷிப் போட்டிகள் புலியூர் மைதானத்தில் அண்மையில் நடைபெற்றன.
இதில் கரூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டியில் வேலம்மாள் பள்ளி மாணவி ராமேஸ்வரபட்டி ரக்ஷனா14 வயதுக்குட்பட்டோர் உயரம் தாண்டுதல் பிரிவில் 1.20மீ. உயரம் தாண்டி முதலிடம் பிடித்தார். இதையடுத்து இந்த மாணவி சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மாணவியை கரூர் அத்லெடிக் அசோசியேசன் செயலர் பெருமாள், தலைவர் கனகராஜ் உள்ளிட்டோர் பாராட்டினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.