காவிரி உபரிநீரை கடவூர் ஏரி, குளங்களுக்கு கொண்டு வர வேண்டும்
காவிரி உபரிநீரை குழாய்கள் மூலமாக கடவூர் ஏரி மற்றும் குளங்களுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
காவிரி உபரிநீரை குழாய்கள் மூலமாக கடவூர் ஏரி மற்றும் குளங்களுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
கரூர் மாவட்டம், தரகம்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.வி. தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், திமுக, மதிமுக,காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், விவசாய சங்கத் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தற்போது காவிரியாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக வெளியேறும் உபரிநீரை குழாய்கள் மூலமாக பஞ்சப்பட்டி, மாவத்தூர், சிந்தாமணிப்பட்டி, முள்ளிப்பாடி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள ஏரி, குளங்களுக்கு கொண்டு வர வேண்டும்.
இதற்குரிய நடவமாநில அளவில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்தைப் பெற்ற திண்டுக்கல் செயின்ட் மேரீஸ் அணிக்கு கோப்பையையும் சான்றிதழ்களையும் வழங்கிறார் மான்போர்ட் பள்ளி முதல்வர் தோமினிக்சாவியோ. டிக்கையை அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.