கேரள மக்களுக்கு உதவ பொருள்களை அளிக்கலாம்
தொடர் மழை காரணமாக வரலாறு காணாத பாதிப்பைச் சந்தித்து, உடைமைகளையும், வீடுகளையும் இழந்து தவிக்கும் கேரள
தொடர் மழை காரணமாக வரலாறு காணாத பாதிப்பைச் சந்தித்து, உடைமைகளையும், வீடுகளையும் இழந்து தவிக்கும் கேரள மக்களுக்கு உதவிடும் வகையில், கரூரில் நன்கொடை மற்றும் பொருள்களைச் செலுத்தலாம் என்று லயன்ஸ் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதுகுறித்து கரூர் பகுதி அனைத்து லயன்ஸ் சங்கங்கள் சார்பில் இரண்டாம் துணை ஆளுநர் சேதுகுமார், சிவசங்கர், சூர்யா கதிரவன், மண்டலம் 4-இன் தலைவர் மேலை பழநியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கரூர் பகுதியிலுள்ள 15 லயன்ஸ் சங்கங்கள், இளம் அரிமா சங்கங்கள் இணைந்து பல்வேறு பொருள்கள் அளிக்கப்பட உள்ளன. 1000 பாய், 1000 பெட்ஷீட், 1000 ரஸ்க் பாக்கெட், 1000 பிஸ்கெட் பாக்கெட்டுகள், 1000 துண்டுகள், 1000 உள்ளாடைகள், 1000 நாப்கின்பாக்கெட், 1000 குழந்தைகள் ஆடை திரட்டி அளிக்கப்பட உள்ளன.
இதற்கான தொகைகள், பொருள்கள் திரட்டும் பணி திங்கள்கிழமை வாகனம் மூலமாகவும், கரூர் பசுபதீவரராஜ ஐயப்ப சேவா சங்கக் கட்டத்திலும் நடைபெறஉள்ளது. செவ்வாய்க்கிழமை மதியம் வரை திரட்டப்படும் பொருள்கள் அரிமா மாவட்டம் 324 ஏ-2 வின் ஆளுநர் ஷேக் தாவூத், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மூலமாக செவ்வாய்க்கிழமை மாலை கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு லயன்ஸ் சங்கமும் தலா ரூ.15,000 வீதம் பங்களிப்பு செய்கின்றன. பொதுமக்கள் நன்கொடைகள் உள்ளிட்டவற்றை செலுத்தலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.