FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் அனைவருக்கும் வேலை வேண்டும்

தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை பேரூராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தி, அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 10:04 am IST
பகிர்:

தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை பேரூராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தி, அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் 6 ஆவது மாவட்ட மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்டத் தலைவர் பி. பாலன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
58 வயதைக் கடந்த ஆண், பெண் தொழிலாளர்களுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி மாத ஓய்வூதியமாக ரூ.3000 வழங்க வேண்டும் . மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மைத் திட்டத் தூய்மைப் பணியாளர்களுக்கு நாள் ஊதியமாக ரூ.400 வழங்க வேண்டும். இப்பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மனை இல்லாத  அனைத்து குடும்பங்களுக்கும் 5 சென்ட் வீட்டுமனை நிலம் வழங்கி, வீடு கட்டுவதற்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் கட்டித் தந்த தொகுப்பு வீடுகள் தற்போது வசிக்க முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும் என்பனஉள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
சங்கக் கொடியை புத்தாம்பூர் பூபதி ஏற்றினார்.  அஞ்சலி தீர்மானத்தை மாவட்டத் துணைச் செயலர் எம்.பி.செல்வம் வாசித்தார்.  மாநாட்டுத் தொடக்கவுரையை சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் வி.பி. பழனிச்சாமி  ஆற்றினார். சங்கத்தின் மாவட்டச் செயலர் ஆர். தங்கவேல்  அரசியல் , அமைப்பு நிலை, வேலை அறிக்கையை வழங்கினார்.  மாவட்டப் பொருளாளர் என். தங்கராஜ் வரவு- செலவு விவரத்தை வழங்கினார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் எம். ரத்தினம், மாவட்டத் துணைச் செயலர்கள் கே. சண்முகம்,  எஸ். மோகன்குமார்,  ஏஐடியுசி  மாவட்டச் செயலர் ஜி.பி.எஸ். வடிவேலன்,   தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் பி.ராஜேந்திரன்,  அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் எம். லட்சுமிகாந்தன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், சங்கத்தின் மாநிலத் தலைவருமான கே. தங்கமணி மாநாட்டு நிறைவுரையாற்றினார்.  முன்னதாக, தாந்தோனி ஒன்றியச் செயலர் எஸ். செல்வம் வரவேற்றார். நிறைவில், தாந்தோனி ஒன்றியத் தலைவர் பி. மருதை நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments