FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

ரூ.17.05 லட்சத்தில் கேரளத்துக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்

வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு, கரூர் மாவட்டத்தில் இருந்து முதல் கட்டமாக ரூ.17.05 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை இரவு அனுப்பி வைக்கப்பட்டன.

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 10:05 am IST
பகிர்:

வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு, கரூர் மாவட்டத்தில் இருந்து முதல் கட்டமாக ரூ.17.05 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை இரவு அனுப்பி வைக்கப்பட்டன.
கரூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில்,  போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் த.  அன்பழகன், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா மணிவண்ணன் ஆகியோர் ரூ.17.05 லட்சம் மதிப்பிலான 14 வகையான நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்தனர். 
இதைத் தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியது: வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு மனிதாபிமானத்துடன் உதவிடும் வகையில் முதல்வர் அறிவுறுத்தியதன் பேரில், கரூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக போர்வை, சக்கர நாற்காலி, மருந்து பொருள்கள், சானிடரி நாப்கின்கள், அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட 14 வகையான பொருள்கள் லாரி மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பொருள்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு,  கேரள மாநிலத்தின் தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளுக்குப் பிரித்து வழங்கப்படும்.  கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சாலை ஆய்வாளர் ராஜா பொறுப்பில் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கூடுதலான நிவாரணப் பொருள்கள் விரைவில் வழங்கப்படும் என்றார் அமைச்சர்.
நிகழ்வில்,  ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எஸ்.கவிதா,   தணிக்கை இயக்குநர் ராஜ்மோகன், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் காளியப்பன், கமலக்கண்ணன், ஜெயராஜ், மல்லிகா சுப்பராயன், செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments