FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கிராம நிர்வாக அலுவலர்கள் பேரணி

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தினர்.           

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தினர்.           
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். உட்பிரிவு பட்டா மாறுதல் உள்பட அனைத்துவிதமான பட்டா மாறுதல்களிலும் கிராமநிர்வாக அலுவலர் பரிந்துரையை கட்டாயமாக்க வேண்டும். 
கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும்.  ஒரே உத்தரவில் மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்தினர். பேரணிக்கு மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். 
முன்னாள் மாவட்டத் தலைவர் பழனியப்பன், மாவட்டச் செயலாளர் மங்கையர்கரசி உள்ளிட்டோர் பேரணியில் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனக் கோஷங்கள் எழுப்பினர். 
முன்னதாக பேரணி தாந்தோணிமலை கிராமநிர்வாக அலுவலர் அலுவலகத்தில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை அடைந்தது. பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments