ஜூனியர் கையுந்து பந்து போட்டி: இந்திய அணியில் பங்கேற்கும் கருர் மாணவர்களுக்கு பாராட்டு
நேபாளத்தில் நடைபெற உள்ள ஜூனியர் கையுந்துபந்துபோட்டியில் இந்திய அணி சார்பில்
நேபாளத்தில் நடைபெற உள்ள ஜூனியர் கையுந்துபந்துபோட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்கும் மலர் மெட்ரிக். பள்ளி மாணவர்களை ஆட்சியர் த.அன்பழகன் திங்கள்கிழமை பாராட்டினார்.
இந்திய கிராம விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் அண்மையில் புணேவில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான ஜூனியர் மற்றும் சப்-ஜூனியர் கையுந்து பந்து போட்டியில், கரூர் தாந்தோணிமலை மலர் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் தமிழக அணி சார்பில் பங்கேற்று 2 ஆம் இடம் பிடித்தனர். தொடர்ந்து, வரும் ஜனவரி மாதம் நேபாளத்தில் 12 நாடுகள் பங்கேற்கும் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்கவுள்ளனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்திற்கு மாணவர்களை வரவழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் பேங்க்.கே.சுப்ரமணியன், பள்ளி இயக்குநர்கள் பெரியசாமி, சுப்பன், மணிவண்ணன் மற்றும் பள்ளி முதல்வர் பாலகிருஷ்ணன், துணை முதல்வர் ஜெயசித்ரா, உடற்கல்வி ஆசிரியர் இளவழகன், ஆசிரியை பானுபிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.