FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் கடுமை கூடாது: நெல், அரிசி மொத்த வியாபாரிகள் சங்கம்

உணவுப் பாதுகாப்புச்சட்டத்தில் உள்ள கடுமையான ஷரத்துக்களை நீக்க வேண்டும் என கரூர் மாவட்ட நெல், அரிசி மொத்த வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 31 டிசம்பர் 2018, 10:13 am IST
பகிர்:

உணவுப் பாதுகாப்புச்சட்டத்தில் உள்ள கடுமையான ஷரத்துக்களை நீக்க வேண்டும் என கரூர் மாவட்ட நெல், அரிசி மொத்த வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கரூரில் அச்சங்கத்தின் 27-வது மகாசபைக் கூட்டம் மாவட்டத் தலைவர் வி.ஆர்.கந்தசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பின் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கே. ராஜூ, மாநில இணைச் செயலர் அருள்செல்வம், கரூர் உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ். லோகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சங்க மாவட்டச் செயலர் கேஎஸ். வெங்கட்ராமன் ஆண்டறிக்கை வாசித்தார்.  கூட்டத்தில் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள கடுமையான ஷரத்துக்களை நீக்க வேண்டும், அரிசியில் பிராண்ட் எனப்படும் ரகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும், விழாக்காலங்களில் ஜவஹர் பஜாரில் ஒலி பெருக்கி வைத்து விளம்பரம் செய்வதால் வியாபாரம் பாதிக்கிறது.  
இதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும். சொத்து வரியை உயர்த்தி அமல்படுத்தக்கூடாது. திருச்சி, கரூர், கோவை தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை துரிதப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட துணைத்தலைவர்கள் நந்தகோபால், சக்திவேல், இணைச் செயலர்கள் கோவிந்தராஜ், தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகமது மீரான் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments