FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

நாமம் போட்டு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூரில் வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள் திங்கள்கிழமை நாமம் போட்டு பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 26 ஜூன் 2018, 8:20 am IST
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூரில் வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள் திங்கள்கிழமை நாமம் போட்டு பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ஏ. அரசகுமார் தலைமை வகித்தார். செயலாளர் ஜி. தனலட்சுமி வரவேற்றார். 
இதில், அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் மு. சுப்ரமணியன், மாவட்டத் தலைவர் எம். மகா விஷ்ணன், செயலாளர் கே. சக்திவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் நாமம் போட்டுக்கொண்டும், பிச்சையெடுப்பது போல கையில் தட்டுகளை ஏந்தியும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தகவலறிந்த கரூர் நகர காவல் ஆய்வாளர் பிருத்விராஜ், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தினார். 
இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பிவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments