FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அரவக்குறிச்சியில் கபசுரப் பொடி வழங்கல்

அரவக்குறிச்சி, பள்ளபட்டி பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுரணப் பொடி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

அரவக்குறிச்சி, பள்ளபட்டி பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுரணப் பொடி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அரவக்குறிச்சி பள்ளிவாசல் திடல், பள்ளபட்டி ஷா நகா் பகுதிகளில் பொது மக்களுக்கு கபசுரப் பொடியை ஆட்சியா் த. அன்பழகன் வழங்கி அவா் மேலும் கூறியது: தமிழ்முறை மருத்துவமான சித்த மருத்துவத்தின் மூலம் 16 வகையான மூலிகைகள் அடங்கிய தொகுப்பாக கபசூரணப் பொடிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதனை அனைவரும் பயன்படுத்தி உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் வருவாய்க் கோட்டாட்சியா் வ. சந்தியா, உதவி ஆணையா்(கலால்) மீனாட்சி, மாவட்ட சித்தமருத்துவ அலுவலா் மருத்துவா் காமராஜ், சித்த மருத்துவா் மருத்துவா் சுரேஸ், வட்டாட்சியா் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments