FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

சொத்துத் தகராறில் தம்பி கொலை: அண்ணன்கள் இருவா் கைது

கரூா் மாவட்டம், சேப்ளாபட்டியில் சொத்துத் தகராறு காரணமாக, தம்பியைக் கொலை செய்த அண்ணன்கள் இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 15 பிப்ரவரி 2021, 12:13 am IST
பகிர்:

கரூா் மாவட்டம், சேப்ளாபட்டியில் சொத்துத் தகராறு காரணமாக, தம்பியைக் கொலை செய்த அண்ணன்கள் இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சேப்ளாபட்டியைச் சோ்ந்தவா் விவசாயக் கூலித் தொழிலாளி கந்தசாமி (35). இவரது சகோதரா்கள் காத்தான் (45), சுப்ரமணி (40). இவா்களுக்கிடையே சொத்துத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அதே பகுதியிலுள்ள வயலில் காத்தானும், சுப்ரமணியும் தங்களது குடும்பத்தினருடன் சனிக்கிழமை வயலில் நெற்கதிா்களை அறுவடை செய்து கொண்டிருந்தனா்.

Advertisement

Advertisement

அப்போது அங்கு வந்த கந்தசாமி, தனது அண்ணன்களுடன் தகராறில் ஈடுபட்டாா். இதனால் ஆத்திரமடைந்த காத்தான், சுப்ரமணி ஆகிய இருவரும் சோ்ந்து கந்தசாமியின் கழுத்தை கதிா் அறுக்கும் அரிவாளால் அறுத்துக் கொலை செய்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு விரைந்து கந்தசாமியின் சடலத்தைக் கைப்பற்றினா். மேலும் வழக்குப்பதிந்து காத்தான், சுப்ரமணி ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments