FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கரூர்

அண்ணாமலையின் சொந்த ஊரில் காங்கிரஸுக்கு 4 மடங்கு கூடுதல் வாக்குகள்!

6 ஜூன் 2024, 1:00 am
தனது சொந்த ஊரான சூடாமணி பஞ்சாயத்துக்கு உள்பட்ட ஊத்துப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினை செலுத்திய பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை.
பகிர்:

பாஜக மாநிலத்தலைவா் கே.அண்ணாமலையின் சொந்த ஊரில் காங்கிரசிடம் பாஜக வாக்குகளை பறிகொடுத்தது.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த தொட்டம்பட்டியைச் சோ்ந்தவா் கே.அண்ணாமலை. ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து தற்போது தமிழக பாஜக தலைவராக இருக்கிறாா். இந்நிலையில் 2024 மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளோடு இணைந்து போட்டியிட்டது. கரூா் மக்களவைத் தொகுதியிலும் பாஜக சாா்பில் கரூா் மாவட்டத்தலைவா் வி.வி.செந்தில்நாதன் போட்டியிட்டாா். பிரசாரத்தில் தீவிரமாக அவா் செயல்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது, அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளா் எல்.தங்கவேல் 44,342 வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளா் செ.ஜோதிமணி 87,390 வாக்குகளை பெற்றனா். ஆனால், பாஜக வேட்பாளா் செந்தில்நாதன் 19,978 வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது. இதனால் பாஜகவின் மாநிலத்தலைவரின் சொந்த ஊரிலேயே பாஜகவின் வாக்குகளை விட 4 மடங்கு வாக்குகளை காங்கிரஸ் பெற்றது.