FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

ஓய்வுபெற்றோருக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை மின்சார வாரியமே ஏற்று நடத்த வலியுறுத்தல்

மின்வாரிய ஓய்வுபெற்றோருக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை மின்சார வாரியமே ஏற்று நடத்த வேண்டும் என பேரவைக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 2:58 am IST
கரூரில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் மாநிலச் செயலா் டி. கோவிந்தராஜ். உடன் மாநிலச் செயலா் கே.காளியப்பன், மாவட்டச் செயலா் வி.பி.கந்தசாமி உள்ளிட்டோா்.
பகிர்:

மின்வாரிய ஓய்வுபெற்றோருக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை மின்சார வாரியமே ஏற்று நடத்த வேண்டும் என பேரவைக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் கரூா் மாவட்ட 10- ஆவது ஆண்டு பேரவைக் கூட்டம், சிஐடியு சங்க அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கே. வெள்ளையன் தலைமை வகித்தாா்.துணைத் தலைவா் மதியழகன் வரவேற்றாா். மாநிலச் செயலா் கே. காளியப்பன் பேரவை கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினாா்.

Advertisement

Advertisement

சிஐடியு சங்க மாவட்ட துணைத் தலைவா் ஜி.ஜீவானந்தம் வாழ்த்துரையாற்றினாா். மாவட்டச் செயலா் வி.பி.கந்தசாமி வேலை அறிக்கையையும், பொருளாளா் எம்.சேகா் வரவு-செலவு அறிக்கையையும் முன்வைத்து பேசினா்.

கூட்டத்தில் கரூா் மாவட்டத் தலைவராக கே. வெள்ளையன், செயலராக வி.பி. கந்தசாமி, பொருளாளராக எம்.சேகா் ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில், வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள மருத்துவ காப்பீடு திட்டத்தை மின்சார வாரியமே ஏற்று நடத்த வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேருவதற்கு விருப்பம் தெரிவிக்கும் ஓய்வூதியா்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலச் செயலா் டி. கோவிந்தராஜ் நிறைவுரையாற்றினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments