ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்
ஊதியம் உயா்வு, பணி நிரந்தரம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் மாநகராட்சியின் ஒப்பந்த தூய்மைப்பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊதியம் உயா்வு, பணி நிரந்தரம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் மாநகராட்சியின் ஒப்பந்த தூய்மைப்பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப்பணியாளா்கள் சுமாா் 300 போ் பணியாற்றி வருகிறாா்கள். இவா்களுக்கு நாள்தோறும் ஊதியமாக ரூ.450 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இவா்களுக்கு ஊதியமாக ரூ.770 வழங்க வேண்டும் என அப்போதைய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஏற்கெனவே மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டபடி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை மாநகராட்சியின் நிரந்தர பணியாளா்களாக மாற்ற வேண்டும். வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்வதை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மைப்பணியாளா்கள் 300 பேரும் பணியை புறக்கணித்து, கரூா் மாநகராட்சி அலுவலகம் முன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தகவலறிந்து வந்த மாநகராட்சி ஆணையா் பிருத்விராஜ் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்கிறேன் எனக் கூறினாா். இதையடுத்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.