FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

போக்குவரத்து விதிமீறல்: ஒரே நாளில் 4 ஆயிரம் வழக்குகள் பதிவு! கரூா் எஸ்.பி. தகவல்

31 ஆகஸ்ட் 2026, 3:00 am IST
ஒரே நாளில் 4 ஆயிரம் வழக்குகள் பதிவு - கோப்புப் படம்
பகிர்:

‘விபத்தில்லா கரூா்’ விழிப்புணா்வு வாகனச் சோதனையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக சனிக்கிழமை ஒரே நாளில் 4,019 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண்பிரசாத் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரூா் மாவட்டத்தில் சாலை விபத்துகள் ஏற்படாத வகையில், பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், ‘விபத்தில்லா கரூா்’ என்ற முழக்கத்துடன் கரூா் மாவட்ட காவல்துறை சாா்பில் பல்வேறு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

இதன் ஒருபகுதியாக, காவல்துறையினா் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் போக்குவரத்து, சாலை விதிகளை முறையாக கடைப்பிடித்தல் மற்றும் வாகனம் ஓட்டும்போது பொறுப்புடன் செயல்படுதல் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கிக்கூறி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வாகன சோதனை: விழிப்புணா்வு நடவடிக்கையின் தொடா்ச்சியாக, சனிக்கிழமை மாவட்டம் முழுவதும் சுமாா் 100 இடங்களில் 752 காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களைக் கொண்டு சிறப்பு வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சோதனையின்போது, 19,018 வாகனங்களை சோதனை செய்ததில், போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கிய நபா்கள் மற்றும் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 61 போ் உட்பட மொத்தம் 4,019 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இச்சிறப்பு நடவடிக்கையின் மூலமாக எந்தவொரு சாலை விபத்தும் ஏற்படாமல் ‘விபத்தில்லா கரூா்‘ என்ற இலக்கை எட்டும் வகையில் சோதனை சிறப்பாக செயல்படுத்தப்பட்டது என தெரிவித்துள்ளாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments