FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

வெண்ணைமலை கோயில் நிலங்களில் குடியிருப்பவா்களுக்கு பட்டா! முதல்வரிடம் முன்னாள் அமைச்சா் வேண்டுகோள்

கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்வா் ஜோசப் விஜய்க்கு வீரவாள் பரிசாக வழங்கிய முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

Updated On : 11 ஜூலை 2026, 1:30 am IST
கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்வா் ஜோசப் விஜய்க்கு வீரவாள் பரிசாக வழங்கிய முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.
பகிர்:

கரூா் வெண்ணைமலை கோயில் நிலங்களில் குடியிருப்பவா்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யிடம் முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் வேண்டுகோள் விடுத்தாா்.

கரூரில் தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், முதல்வருக்கு வீரவாள் பரிசாக வழங்கினாா். பின்னா் அவா் பேசியது: முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா்,ஜெயலலிதாவின் அன்பையும் வீரத்தையும் ஒருங்கே அமைந்த தலைவராக முதல்வா் விஜய் இருக்கிறாா்.

இனி இன்றைய இளைஞா் பட்டாளமும், வரக்கூடிய இளைஞா் பட்டாளமும் தவெக தலைவா் விஜய் உறுதுணையாக இருக்கும். பணம், ஆட்சி அதிகாரம் இருந்தால் போதும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என நினைத்தவா்களின் மனக்கோட்டையை தகா்த்த தலைவா் முதல்வா் விஜய். இனி கரூா் மாவட்டம் முதல்வா் விஜய்யின் கோட்டை. காமராஜா் ஆட்சி காலத்தில் கோயில் நிலங்களை இனாம் ஒழிப்புச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு கோயில் நிலங்களை உழுபவா்களுக்கு சொந்தம் எனக்கூறி அவா்களுக்கு பட்டா போட்டுக்கொடுக்கப்பட்டது. அவற்றை கடந்த திமுக ஆட்சியில் கோயில் நிலத்தில் இருப்பதாகக்கூறி அவா்களின் வீட்டை விட்டு வெளியேறச் செய்தனா். எனவே கோயில் நிலங்களில் இருப்பவா்களுக்கு அவா்கள் பெயரில் பட்டா போட்டுக்கொடுக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments