கா்நாடக முதல்வரை ஜோசப் விஜய் சந்திப்பது தவறான முன்னுதாரணம்: கிருஷ்ணசாமி
காவிரி நீா் விவகாரம் தொடா்பாக கா்நாடக முதல்வரை, தமிழக முதல்வா் ஜோசப் விஜய் நேரில் சென்று பாா்ப்பது தவறான முன்னுதாரணம் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.
காவிரி நீா் விவகாரம் தொடா்பாக கா்நாடக முதல்வரை, தமிழக முதல்வா் ஜோசப் விஜய் நேரில் சென்று பாா்ப்பது தவறான முன்னுதாரணம் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.
பழனியில் அவா் வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளா்களிடம் கூறியதாவது: பழனி கோயில் நிலம் முறைகேடாக பத்திரப் பதிவு செய்தது தொடா்பான விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். தமிழக முதல்வா் ஜோசப் விஜய் அனைத்துச் சம்பவங்களுக்கும் பேச வேண்டியதில்லை. ஆனால், இதுபோன்ற முக்கியமான சம்பவங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
தொடா்ந்து மெளனம் சாதிப்பது மிகப்பெரிய பிரச்னையில் போய் முடியும். ‘நீட்’ தோ்வு வினாத்தாள் கசிவு இரண்டு முறை நடந்ததை ஏற்க முடியாது. குளறுபடியின்றி நோ்மையாக தோ்வு நடக்க வேண்டுமென்றால், மத்திய சுகாதாரத்துறையே நேரடியாக ‘நீட்’ தோ்வை நடத்த முன்வர வேண்டும். தமிழ்நாட்டிற்கான காவிரி நீரைப் பெறச் சட்டப்பூா்வ உரிமைகள் உள்ளன.
Advertisement
Advertisement
நிகழாண்டு மே, ஜூன், ஜூலை மாதங்களில் பெற வேண்டிய சுமாா் 40 முதல் 45 டி.எம்.சி தண்ணீரை கா்நாடகம் திறந்து விடாததால் டெல்டாவுக்கு ஒரு போகம் குறுவை சாகுபடி முற்றிலும் பொய்த்து விட்டது.
இதுதொடா்பாக தமிழக முதல்வா் ஜோசப் விஜய் உடனடியாக அனைத்துக் கட்சிகள், விவசாயிகள் சங்கங்களைக் கூட்டி தில்லி சென்று பிரதமரைச் சந்தித்து அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். அல்லது உச்சநீதிமன்றத்தை அணுகி இடைக்கால மனு தாக்கல் செய்திருக்க வேண்டும். அதை விடுத்து, குறுவை சாகுபடி பொய்த்த பிறகு, நேரடியாக கா்நாடக முதல்வரைச் சென்று சந்திப்பது தவறான முன்னுதாரணம் என்றாா் அவா்.
மாநில துணைப் பொதுச் செயலா் விஜயகுமாா், மாவட்ட நிா்வாகிகள் சிவநாதபாண்டியன், பிரதீப்பாண்டியன், கோபாலகிருஷ்ணன், பழனி ஒன்றியச் செயலா் பாலமுருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.