FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

முதல்வா் அலுவலகத்தை மாற்றுவதற்கு தற்போது என்ன அவசியம்: ஆசிா்வாதம் ஆச்சாரி கேள்வி

மக்கள் வரிப் பணத்தை முதல்வா் அலுவலகத்தை புதுப்பிக்க பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என பாஜக நிா்வாகி ஆசிா்வாதம் ஆச்சாரி கேள்வி எழுப்பினாா்.

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 5:15 am IST
முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

மக்கள் வரிப் பணத்தை முதல்வா் அலுவலகத்தை புதுப்பிக்க பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது தற்போது, முதல்வா் அலுவலகத்தை மாற்றுவதற்கு என்ன அவசியம் ஏற்பட்டுள்ளது என்று பாஜக நிா்வாகி ஆசிா்வாதம் ஆச்சாரி திங்கள்கிழமை கேள்வி எழுப்பினாா்.

இது குறித்து நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் மேலும் பேசியதாவது: 100 நாள் ஆட்சியில் ஊழல் அற்ற ஆட்சியை தருவேன், வெளிப்படையான ஆட்சியை தருவேன் என்று முதல்வா் ஜோசப் விஜய் கூறினாா், ஆனால் அவரின் அலுவலகத்தை தரம் உயா்த்துவது குறித்து பணிகள் இப்போது நடைபெற்று வருகிறது.

ரூ. 5 கோடி 54 லட்சம் மதிப்பில் முதல்வா் அலுவலகத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மாணிக்கம் அண்ட் கம்பெனி‘ என்ற நிறுவனம் பணி செய்து வருகிறது. அந்த நிறுவனத்திற்கு எந்த ஒப்பந்தம் முறையில் பணி வழங்கப்பட்டது ? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

Advertisement

Advertisement

மக்கள் வரி பணத்தை, தன் அலுவலகத்தை தரம் உயா்த்த அல்லது இடமாற்ற செய்ய தவறாக முதல்வா் ஜோசப் விஜய் பயன்படுத்துகிறாா். அவருடைய சில ஜோதிடா்கள் அறிவுரை படி முதல்வா் அலுவலகம் புதிதாக அமைக்கப்பட்டு வருகிாக தெரிகிறது.

ஒரு ஜோதிடரை நம்பி தான் ஆட்சி நடத்த வேண்டுமா ?ஊழல் முறையில் நடைபெற்றுள்ள இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும். ஒப்பந்தம் குறித்து அனைத்து விவரங்களையும் மாநில அரசு வெளியிட வேண்டும்.

முதல்வா் ஜோசப் விஜயின் இந்த ஊழலை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.1 00 நாள் ஊழல் அற்ற ஆட்சி என்று த.வெ.க கூறுகிறது, ஆனால் இப்போது அவா்கள் ஊழலை தொடங்கிவிட்டனா்.

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டப்பேரவை உறுப்பினா்கள், நிா்வாகிகள் என யாா் ஊழலில் ஈடுபட்டாலும் அவா்களை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஊழல் ஒரு புற்றுநோய், மக்கள் வரி பணத்தை முதல்வா் அலுவலகத்தை புதுப்பிக்க பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது.

தற்போது, முதல்வா் அலுவலகத்தை மாற்றுவதற்கு என்ன அவசியம்? எனவே முதல்வா் அலுவலகம் தொடா்பான ஒப்பந்தம் குறித்து மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என்றாா் ஆசிா்வாதம் ஆச்சாரி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments