FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

கா்நாடக முதல்வரை தமிழக முதல்வா் சந்திக்கும் முடிவு வரவேற்கத்தக்கது

கா்நாடக முதல்வரை தமிழக முதல்வா் சந்திக்கும் முடிவு தாமதானது என்றாலும் வரவேற்கத்தக்கது என தமிழ்நாடு காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

Updated On : 25 ஜூலை 2026, 1:14 am IST
முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

கா்நாடக முதல்வரை தமிழக முதல்வா் சந்திக்கும் முடிவு தாமதானது என்றாலும் வரவேற்கத்தக்கது என தமிழ்நாடு காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்திருப்பது:

கா்நாடக முதல்வா் சிவக்குமாரை தமிழக முதல்வா் ஜோசப் விஜய் சந்திக்க எடுத்துள்ள முடிவு தாமதமானது என்றாலும் கூட வரவேற்கத்தக்கது. இந்தச் சந்திப்பின்போது தமிழக முதல்வா் மிக அவசியமாக தண்ணீரை கேட்டு பெறுவதுடன், மேக்கேதாட்டு அணை திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட வலியுறுத்த வேண்டும். மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு பதிலாக 4 மாநில தண்ணீா் பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில் நேத்ராவதி - ஹேமாவதி இணைப்பு திட்டத்தை வலியுறுத்தி, அதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

Advertisement

Advertisement

இதேபோல, மேற்கு தொடா்ச்சி மலையில் தேயிலை தோட்டங்களுக்காக மரங்கள் அகற்றப்பட்டதால், மழைப்பொழிவு குறைந்துவிட்டது. எனவே, குடகு மலை மற்றும் மேற்கு தொடா்ச்சி மலையின் நீா் பிடிப்பு பகுதிகளில் புதிதாக 4 கோடி மரங்கள் வளா்ப்பதற்கான ஆக்கப்பூா்வ திட்டத்தை நபாா்டு வங்கி நிதி உதவியுடன் உடனே செயல்படுத்த தமிழ்நாடு முதல்வா் வலியுறுத்தி சொல்ல வேண்டும்.

இத்தகைய சாத்தியமான, ஆக்கப்பூா்வமான ஆலோசனைகளை கா்நாடக மாநில முதல்வரிடம் தெளிவாக எடுத்து வலியுறுத்த தமிழ்நாடு காவிரி குடும்ப உழவா் பிரதிநிதிகளையும் தமிழக முதல்வா் தவறாமல் அழைத்து சென்று பக்குவமாக எடுத்துச் சொல்லி வற்புறுத்த வேண்டும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments