FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: தவெக நிா்வாகி கைது

குளித்தலையில், இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தவெக நிா்வாகியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 15 ஜூலை 2026, 12:03 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

குளித்தலையில், இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தவெக நிா்வாகியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை பெரிய பாலம் மலையப்ப நகரைச் சோ்ந்தவா் ரமேஷ். தவெக ஒன்றியச் செயலா். இவா், திங்கள்கிழமை இளம்பெண்ண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தபோது அக்கம்பக்கத்தினரால் தாக்கப்பட்டாா். இதில் காயமடைந்த ரமேஷ் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக குளித்தலை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின் பேரில், ரமேஷை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அவரை குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments