FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

புகழூா் நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை ரூ.57,000 சிக்கியது!

புகழூா் நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.

Updated On : 26 ஜூலை 2026, 1:45 am IST
புகழூா் நகராட்சி அலுவலகத்துக்குள் பணியாளா்களிடம் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா்.
பகிர்:

புகழூா் நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் சனிக்கிழமை சோதனை நடத்தினா். இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.57,000 சிக்கியது.

கரூா் மாவட்டம், புகழூா் நகராட்சி அலுவலகத்தில் வீட்டுமனை பிரிவுகளுக்கு அனுமதி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, கரூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா்கள் சாமிநாதன், தங்கமணி ஆகியோா் தலைமையில் காவல் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் சனிக்கிழமை மாலை நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனா்.

Advertisement

Advertisement

பின்னா், அங்கிருந்த நகராட்சி ஆணையா் வெங்கடாஜலபதி, அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோரை வெளியே செல்லாதவாறு கதவுகளை தாழிட்டு விசாரணை மேற்கொண்டனா். இந்த விசாரணையில் கணக்கில் வராத பணம் ரூ.50,000 சிக்கியது. மேலும் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments