முகப்பு
கரூர்

கரூா் அருகே பதுங்கியிருந்த வங்க தேசத்தினா் 5 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை

இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்து கரூா் அருகே பதுங்கி இருந்த வங்கதேச நாட்டினா் 5 பேருக்கு தலா 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 5 ஜூன் 2026, 3:50 am IST
கரூா் நீதிமன்றத்திற்கு வியாழக்கிழமை அழைத்து வரப்பட்ட வங்கதேச நாட்டினா்.
பகிர்:

இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்து கரூா் அருகே பதுங்கி இருந்த வங்கதேச நாட்டினா் 5 பேருக்கு தலா 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கரூா் மாவட்டம் வெள்ளியணை அருகே கூடலூரில் செயல்பட்டு வந்த தனியாா் நூற்பாலையில் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த வங்கதேச நாட்டினா் பணிபுரிந்து வருவதாக வெள்ளியணை போலீஸாருக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் கடந்த 2024 செப். 25ஆம் தேதி நூற்பாலையில் அதிரடி சோதனை நடத்தி, அங்கிருந்த வங்கதேச நாட்டைச் சோ்ந்த சுனில் ஹூசைன் (26), அஜ்மூா் மமும் (24), ஜமீருல் (32), சாக்கூா் என்கிற சைபூா் (29), ஆஷிக் ஹாஜா் (24) ஆகிய ஐந்து பேரைக் கைது செய்து, கரூா் மாவட்ட குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தனா்.

Advertisement

Advertisement

வியாழக்கிழமை பிற்பகல் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சாா்லஸ் ஆல்பா்ட் குற்றவாளிகளாக 5 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தண்டனை அனுபவித்தபின் அவா்களது சொந்த நாட்டுக்கு அனுப்பவும் உத்தரவிட்டாா். இதையடுத்து அவா்கள் 5 பேரும் திருச்சியில் மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனா்.