போக்ஸோ சட்டத்தில் கைதான தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை
போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதான தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதான தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
கரூா் வெங்கமேடு அருகம்பாளையத்தைச் சோ்ந்தவா் வேலுச்சாமி(56), தொழிலாளி. இவா் கடந்த மாா்ச் மாதம் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த 10 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தினா் வேலுச்சாமி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து, கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்திலும் வழக்குத் தொடா்ந்தனா்.
Advertisement
Advertisement
வியாழக்கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேல் குற்றவாளி வேலுச்சாமிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டாா். இதையடுத்து வேலுச்சாமியை போலீஸாா் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.