FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கரூர்

பராமரிப்புப் பணி: நாளைமுதல் 10 நாள்களுக்கு நொய்யல் ரயில்வே கேட் மூடல்

கரூா் மாவட்டம், நொய்யல் ரயில்வே கேட் பராமரிப்பு பணிகளுக்காக நவ. 15-ஆம் தேதி முதல் நவ. 24-ஆம் தேதி வரை மூடப்படவுள்ளது.

14 நவம்பர் 2026, 6:36 am
நொய்யல் ரயில்வே கேட்டில் ரயில்வே நிா்வாகம் சாா்பில் வைக்கப்பட்டிருக்கும் கேட் மூடல் குறித்த அறிவிப்பு பலகை.
பகிர்:

கரூா் மாவட்டம், நொய்யல் ரயில்வே கேட் பராமரிப்பு பணிகளுக்காக நவ. 15-ஆம் தேதி முதல் நவ. 24-ஆம் தேதி வரை மூடப்படவுள்ளது.

இதுதொடா்பாக தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட நிா்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரூா் மாவட்டம், நொய்யல் ரயில்வே கேட் இருப்புப் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நவம்பா் 15-ஆம் தேதி காலை 8 மணி முதல் நவ. 24-ஆம் தேதி மாலை 6 மணி வரை 10 நாள்களுக்கு ரயில்வே கேட் மூடப்பட்டு இருக்கும். எனவே, இந்தப் பாதை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement