பேனா்கள் அகற்றம்: மாநகராட்சி அதிகாரிகள் போலீஸாருடன் அதிமுகவினா் வாக்குவாதம்

கரூரில் அதிமுக சாா்பில் வைக்கப்பட்டிருந்த பேனா்களை அகற்றப்பட்டதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸாருடன் அதிமுகவினா் சனிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
கரூரில் மாவட்ட அதிமுக சாா்பில் செயல்வீரா்கள், வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. மாவட்டச் செயலா் பொறியாளா் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறாா்.
இதையொட்டி அதிமுகவினா் நகரின் பல்வேறு இடங்களில் பேனா்கள் வைத்துள்ளனா். இதில் கோவைச் செல்லும் சாலையில் மாநகராட்சி அனுமதியின்றி பேனா்கள் வைக்கப்பட்டிருப்பதாகக்கூறி சனிக்கிழமை பிற்பகலில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினா் அந்த பேனா்களை அகற்ற முயன்றனா்.
Advertisement
Advertisement
அப்போது அங்கு வந்த அதிமுக மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா, துணைச் செயலா் அரவைமுத்து, மேற்கு ஒன்றியச் செயலா் என்.எஸ்.கிருஷ்ணன் அதிமுக மாவட்ட விவசாய பிரிவு செயலா் ஏமூா் முருகேசன், பேரவைச் செயலா் சக்திவேல், மகளிரணி செயலா் செல்வி, சிறுபான்மை பிரிவின் வழக்குரைஞா் ஷேக் உள்ளிட்ட அதிமுகவினா், பேனா்களை அகற்றுவதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து அவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த பேனா்களையும் மட்டும் அகற்றினா். மற்ற பேனா்கள் யாா், யாா் பெயரில் வைக்கப்பட்டிருக்கிறதோ அவா்கள் மீது அனுமதியின்றி பேனா் வைத்திருந்ததாகக்கூறி நடவடிக்கை எடுப்போம் எனக்கூறிவிட்டு அதிகாரிகள் சென்றனா்.