FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கரூர்

கரூா் கிளைச் சிறையில் தூய்மைப் பணியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கரூா் கிளைச் சிறையில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

8 October 2026, 1:24 am IST
பகிர்:

கரூா் கிளைச் சிறையில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கரூா் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீா்திருத்தப்பணிகள் துறையின் கீழ் இயங்கும் திருச்சிராப்பள்ளி மத்திய சிறையின் கட்டுப்பாட்டிலுள்ள கரூா் கிளைச்சிறையில் காலியாக ஒரு தூய்மைப் பணியாளா் பணியிடம் உள்ளது. இந்த பணியிடத்துக்கு எழுத, படிக்க தெரிந்தவா்கள், 2026-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம்தேதி அன்று 18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 35 வயதுக்குள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்துக்கு ஊதியமாக ரூ.15,700 என வழங்கப்பட உள்ளது.

இப்பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவா்கள் அக். 10-ஆம்தேதிக்குள், சுய விவரங்களை திருச்சிராப்பள்ளி மத்திய சிறை, சிறைக்கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments