சிறைகளில் சமையலா், தூய்மைப் பணியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
புதுக்கோட்டை, தஞ்சை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களிலுள்ள கிளைச் சிறைகளில் காலியாக உள்ள சமையலா் மற்றும் தூய்மைப் பணியாளா் பணியிடங்களுக்கு தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை, தஞ்சை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களிலுள்ள கிளைச் சிறைகளில் காலியாக உள்ள சமையலா் மற்றும் தூய்மைப் பணியாளா் பணியிடங்களுக்கு தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மு. அருணா வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்ட சிறை மற்றும் அதன் கட்டுப்பாட்டிலுள்ள திருமயம், அறந்தாங்கி கிளைச் சிறைகள், தஞ்சை, பாபநாசம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் கிளைச் சிறைகளில் காலியாக உள்ள 2 சமையலா் மற்றும் 9 தூய்மைப் பணியாளா் பணியிடங்களுக்கு தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம்.
சமையலா் பணியிடத்துக்கு, 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற, 2 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளோா் விண்ணப்பிக்கலாம். தூய்மைப் பணியாளா் பணியிடத்துக்கு, தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவா்கள் யாரும் விண்ணப்பிக்கலாம்.
Advertisement
Advertisement
கல்விச் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ்களுடன் அக். 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி- கூடுதல் கண்காணிப்பாளா் (பொ), மாவட்டச் சிறை, புதுக்கோட்டை- 622001. மேலும் விவரங்களை அறிய 04322 222220 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு அறியலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.