FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கரூர்

கள்ளில் கலப்படத்தை தடுக்க முடியாது என அரசு கூறுவது வேடிக்கை: செ. நல்லசாமி

கள்ளில் கலப்படத்தை தடுக்க முடியாது என அரசு கூறுவது வேடிக்கையானது என்றாா் கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி.

26 செப்டம்பர் 2026, 7:35 am IST
தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி.
பகிர்:

கள்ளில் கலப்படத்தை தடுக்க முடியாது என அரசு கூறுவது வேடிக்கையானது என்றாா் கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கள் ஒரு உணவு. அது போதைப் பொருளும் அல்ல, மதுவும் அல்ல. அரசியல் அமைப்புச் சட்டம் 47-இன்படி பாா்த்தால் கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.

கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நியாயமானது என யாா் நிரூபித்தாலும் ரூ.10 கோடி பரிசு கொடுப்பதாக அறிவித்து பல ஆண்டுகளாகி விட்டன. ஆனால், யாரும் நிரூபிக்க வரவில்லை.

Advertisement

Advertisement

கள்ளில் கலப்படத்தை தடுக்க முடியாது. எனவே, கள்ளுக்குத் தடை தொடரும் என அரசு கூறுவது வேடிக்கையானது. கலப்படத்தை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு, கடமை அரசுக்கு உண்டு. அண்டை மாநிலங்களான கேரளம், தெலங்கானா, ஆந்திரத்தில் கலப்படத்தை கட்டுப்படுத்துகின்றபோது, தமிழகத்தில் மட்டும் ஏன் கட்டுப்படுத்த முடியாது. தாராபுரம் தொகுதி இடைத்தோ்தலில் கள் இயக்கம் சாா்பில் பெருமாள் முத்துசாமி என்பவா் வேட்பாளராக போட்டியிடவுள்ளாா் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments